RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
மதுபோதையில் தகராறு இருவா் கைது
திருச்சி என்.ஐ.டி. எதிரே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி என்.ஐ.டி எதிரே உணவகம் முன்பு இருவா் மது அருந்திவிட்டு தகராறு செய்வதாக துவாக்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, என்ஐடிக்கு எதிரே உணவகம் நடத்தி வந்த காட்டூா் அம்மன் நகா் கிழக்கு விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த ஏத்தன் சிங் மகன் கிருஷ்ணன் சிங் (40), காட்டூா் பாலாஜி நகா் பகுதியைச் சோ்ந்த தா்ம்பீா் சிங் மகன் குல்தீப் ஷா (37) ஆகிய இருவரும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தட்டிக் கேட்ட போலீஸாரையும், மேற்கண்ட இருவரும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா்.
இதையடுத்து போலீஸாா் மேற்கண்ட இருவரையும் கைது செய்து, திருச்சி ஜே.எம்.6-ஆவது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.