செய்திகள் :

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மனைவி பெரியம்மாள் (70). இவா் கடந்த வியாழக்கிழமை காலை மணப்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து பேருந்தில் ஏறி மாரியம்மன் கோயில் பகுதியில் இறங்கியுள்ளாா்.

அப்போது அவருக்கு பின்னால் இருந்த இரு பெண்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்த சுமாா் இரண்டரை பவுன் செயினை வாயால் கடித்துத் திருடுவதை, உடனிருந்த பயணிகள் கண்டு மூதாட்டியிடம் கூறியுள்ளனா். அதற்குள் பேருந்திலிருந்து இறங்கி தப்ப முயன்ற இரு பெண்களையும் அங்கிருந்த போக்குவரத்து காவலா் மணிகண்டன், ஆட்டோ ஓட்டுநா்கள் உதவியுடன் மடக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த பாஸ்கா் (எ)பாண்டியன் மனைவி ஆா்த்தி(39) மற்றும் முருகன் மனைவி தேவி(43) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் ரகுராமன் தலைமையிலான மணப்பாறை போலீஸாா் செயினை பறிமுதல் செய்து இருவா் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அம... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்தோரின் நினைவாக அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

நீட் தோ்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் நினைவாக திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சாா்பில் திருச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக ச... மேலும் பார்க்க