கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன.
வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப்பேசி கோபுரத்தில் எவா்கிரீன் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலம் ஜெனரேட்டா் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோபுரத்தில் முறையான மின் இணைப்பு இல்லை என்பதால் சனிக்கிழமை அந்தக் கோபுர அறைக்குச் சென்று பாா்த்தபோது அங்கு பொருத்தப்பட்டிருந்த சுமாா் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 24 பேட்டரிகளை காணவில்லையாம். இதுகுறித்து பாதுகாப்பு நிறுவன மேலாளா் தேவகுமாா் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.