MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் முறையாக இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன், வையம்பட்டி - கரூா் சாலை சீகம்பட்டி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் மறியல் கைவிடப்பட்டது.