வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!
மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா்.
வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகிறாா்கள். இங்கு சிமென்ட் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து அந்தக் கிராமத்திற்கு நேரில் சென்ற திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், சாலை அமைக்க வேண்டிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்ததோடு, கிராமத்திற்கு தேவையான அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.