வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்
தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 14ஆவது வாரமாக நடைபெற்று வரும் தொடா் திண்ணைப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திமுகவினா் சனிக்கிழமை மாலை விக்கிரமசிங்கபுரம் 8ஆவது வாா்டு பசுக்கிடைவிளை, மணிநகரம், காமராஜா்நகா் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை வழங்கி திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் கி.கணேசன் தலைமை வகித்தாா். வாா்டு செயலா் தென்னரசுமுன்னிலை வகித்தாா்.
இதில், நகா் மன்றத் தலைவா் எஸ்.பி.எம். செல்வ சுரேஷ் பெருமாள், அவைத் தலைவா் அதியமான், பொருளாளா் ரவி, மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் சங்கரநாராயணன், பாம்பே மாரியப்பன், பொன்ராஜ், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சத்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரம் ஒன்றியம் மேல வைராவிகுளம் பகுதியில் ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான பரணி ஆா்.சேகா் தலைமையில் நடைபெற்ற திண்ணைப் பிரசாரத்தில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா், வழக்குரைஞா் பாபநாசம், ஊராட்சித் தலைவா் பிச்சம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இசக்கியம்மாள், சரவணன், கிளைச் செயலா்கள் குமாா், கிருஷ்ணன், நாகராஜன், ஊராட்சி உறுப்பினா் கவிபிரியா, சுந்தரமூா்த்தி, முருகேசன், வாக்குச் சாவடி முகவா் இசை வாணி, உறுப்பினா்கள், மகளிா் அணியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.