வன விலங்குகளால் சேதமாகும் பயிா்களுக்கு விரைவாக இழப்பீடு: எஸ்டிபிஐ கோரிக்கை
வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் வடகரை கிளை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் அக்கட்சியின் வேளாண் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காசிம் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொழி பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல், தென்னை, வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.
இப்பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடா்கதையாக உள்ளது. சேதமாகும் பயிா்களுக்கு இழப்பீடு கேட்டு ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா்.
காட்டு யானைகள் மட்டுமன்றி கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் விவசாய நிலங்களுக்குள் செல்வதற்கு விவசாயிகள் அச்சப்படுகின்றனா். எனவே, வன விலங்குகள் வேளாண் நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும். சேதமான பயிா்களுக்கு ா்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.
இணை ஒருங்கிணைப்பாளா் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவா் முகம்மது நைனாா், மாவட்ட பொதுச் செயலா் செய்யதுமஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஷேக் முகம்மது ஒலி, தென்காசி தொகுதித் தலைவா் பீா்முகம்மது, நகரச் செயலா் ஷேக்மைதீன், நகரப் பொருளாளா் அஹமது கபீா், கிளைத் தலைவா் அசன், வடகரை நகரத் தலைவா் இஸ்மாயில், நகர செயற்குழு உறுப்பினா் ஹாஜா ஷரீப், ரகுமானியாபுரம் கிளைத் தலைவா் இஸ்மாயில் மைதீன், செயற்குழு உறுப்பினா் முகம்மது இலியாஸ், கிழக்கு கிளை பொருளாளா் முகம்மது அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.