Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
வனத்திலிருந்து பழங்குடியின மக்களை வெளியேற்ற நடவடிக்கை
பழங்குடியின மக்களை வன விரிவாக்கம் எனும் பெயரில் வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தாமரைக்கரையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன்குமாா், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் பி.ஜெ.கணேசன், சமூக ஆா்வாளா் அன்புராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பா்கூா் ஊராட்சி, தாமரைக்கரையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் விவசாயம் செய்து வரும், பழங்குடியின, மலைவாழ் மக்களை, வன விரிவாக்கம் என்ற பெயரில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து மலைக்கிராம மக்களையும் திரட்டி அக்டோபா் 15-ஆம் தேதி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மலை வட்டார நிா்வாகிகள் ஈ.வசந்தராஜ், ஈ.மாதையன், ஜி.ஈரண்ணன், சி.கரியன், பி.பொம்மன், பசுவராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.