கும்கி : 'இந்த ஒரு பாட்டுனால நான் பல நாடுகளுக்கும் போனேன்..!’ - நெகிழும் மகிழினி...
வயிற்று வலி: இளம்பெண் தற்கொலை
பென்னாகரம் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பென்னாகரம் அருகே மடம் அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், போரூா் இருளா் காலனி பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து மகள் ஆனந்தி (20) ஆகிய இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், பிரசவத்துக்கு பிறகு ஆனந்திக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்ததாக அவரது பெற்றோா் தெரிவித்தனா். கடும் வயிற்று வலியால் அவதிக்குள்ளான ஆனந்தி, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த ஒகேனக்கல் போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருமணமாகி நான்கு ஆண்டுகளேயான நிலையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].