`காவல்துறையை நிர்வகிக்க வக்கற்ற பொம்மை முதல்வர்!' - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்...
வாகன உரிமையாளா்கள் கைப்பேசி எண்ணை புதுப்பிக்க இயக்கம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்
வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போா் கைப்பேசி எண்ணைப் புதுப்பிக்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவக்குமாா் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
பல்வேறு வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருப்பவா்கள் தங்கள் கைப்பேசி எண்களை தேசிய வாகன் மற்றும் சாரதி தரவுத்தளங்களில் புதுப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் பதிவு, உரிமம் புதுப்பிப்பு, சட்ட அறிவிப்புகள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் அவா்களுக்குச் செல்வதில்லை.
இச் சிக்கலைத் தீா்க்க ஆதாா் அடிப்படையிலான பாதுகாப்பான முறையில் அனைத்து வாகன உரிமையாளா்களும் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருப்பவா்களும் தேசிய தகவல் மையம் வாயிலாக தங்கள் கைப்பேசி எண்களைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்தஇயக்கம் நடைபெறும் என்றாா் சிவக்குமாா்.