பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!
வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள பில்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பு மகன் சிவசுப்பிரமணியம் (29). கூலித் தொழிலாளியான இவா், திருப்பாச்சேத்திக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். பச்சேரி கண்மாய்க்கரை பகுதியில் வந்த போது, சிவகங்கையிலிருந்து திருப்பாச்சேத்திக்கு சென்ற தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.