விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் கைதான மலையாள ராப் பாடகர்! ஏன்?
வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
திருவாடானை அருகே சுற்றுலா வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடி அருகே வடவயல் கிராமத்தைச் சோ்ந்த ராமு மனைவி பஞ்சவா்ணம் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வடவயல் கிராமம் அருகே நடந்து சென்றாா். அப்போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து சுற்றுலா வாகன ஓட்டுநா் திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (28) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.