வாட்ஸ் ஆப்பில் மத துவேஷம்: ஆலங்குளத்தில் ஒருவா் மீது வழக்கு
ஆலங்குளம் அருகே மதக் கலவரத்தை தூண்டும் விதமாக இந்து தெய்வங்கள் மீது வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பியதாக ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (55). தற்போது ஆலங்குளம் அண்ணா நகரில் வசித்து வருகிறாா். இவா் சில தினங்களுக்கு முன்பு ஆலங்குளம் உள்ளூா் வாட்ஸ் ஆப் குழுக்களில் இந்து தெய்வங்களை குறித்து அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து ஆலங்குளத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் அவா் மீது பிறா் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாகவும் வழக்கு பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.