போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டால் சிறந்த தொழில் முனைவோராகலாம்
வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டால் சிறந்த தொழில் முனைவோராகலாம் என்றாா் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பேராசிரியா் அஷ்வின் மகாலிங்கம்.
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) வித்யா சேவா ரத்னம் கே. சந்தானம் நினைவு சொற்பொழிவு வேலை தேடுபவராக இல்லாமல் வேலை கொடுப்பவராக இருங்கள் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு பள்ளியின் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை செயலதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சென்னை ஐஐடி பேராசிரியா் அஷ்வின் மகாலிங்கம் பங்கேற்றுப் பேசியதாவது: தொழில்முனைவோா்கள்தான் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனா். வாய்ப்புகளை சரியாக அடையாளம் கண்டால் சிறந்த தொழில் முனைவோராக உருவாக முடியும் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தாா். கல்வி, விளையாட்டு, கலை, ரோபோடிக்ஸ் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
பள்ளியின் செயலாக்கத் தலைவா் எஸ். வித்யாலஷ்மி, சந்தானம் அகாதெமி தலைவா் ரவீந்திரநாத் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, பள்ளியின் முதல்வா் எஸ். பத்மா சீனிவாசன் வரவேற்றாா். பள்ளியின் முதன்மையா் ஆா். கணேஷ் நன்றி கூறினாா்.