தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
வார பலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை - பலன்கள், அதிர்ஷ்டக்குறிப்புகள்!
மேஷராசி அன்பர்களே!
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உஷ்ணத்தின் காரணமாக வயிறுவலி ஏற்பட சாத்தியம் உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/wy05qc42/mesham.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன்படவும் நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
ரிஷப ராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம். வீடு,நிலம் தொடர்பான முயற்சிகள் இழுபறியாகி முடியும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பழைய கடன்களை வசூலிப்பதில் பொறுமையான அணுகுமுறை அவசியம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/bo1jxfzl/rishapam.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் இனம் தெரியாத ஒரு விரக்தி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,14
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7,9
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற பணிமின் கனிந்து
மிதுன ராசி அன்பர்களே!
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் ஏற்பட்டிருந்த மனவருத்தங் கள் நீங்கி, சுமுக உறவு ஏற்படும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதக மாகும்.
அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப் பணிகளை கவனமாகச் செய்யவும். சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். ஆனாலும், பணியாளர்களால் சில நேரங்களில் வீண் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/a9t0wnu1/mithunam.jpg)
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம் என்றே சொல்ல வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,16
அதிர்ஷ்டம் தரும் எண்: 1,6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே - அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
கடகராசி அன்பர்களே!
உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்வீர்கள். பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/g28pgx3a/kadakam.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,13
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்
முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்
மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.
சிம்ம ராசி அன்பர்களே!
குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளும் உண்டாகும். பணவரவு கூடுதலாக இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சிகள் எதிலும் இறங்கவேண்டாம்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் கும். மேலதிகாரிகளை அணுகும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடி ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/oyqhojlr/simmam.jpg)
குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு நிம்மதியான வாரம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
கன்னிராசி அன்பர்களே!
பொருளாதார வசதி நல்லபடியாக இருக்கும். வாரப் பிற்பகுதியில் சிறிய அளவில் உடல்நல பாதிப்பும் அதன் காரணமாக மருத்துவச் செலவும் ஏற்படும். திருமணத்துக்கு காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது சிக்கல்களைத் தவிர்க்கும்
வியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/o50v3clj/6768fa0b6e29f.jpg)
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சற்று மனச் சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,14
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே