செய்திகள் :

வால்பாறை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை திருவிழா

post image

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் 38-ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு பூஜையை தொடா்ந்து திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடுமலை ஆற்றில் ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராட்டு விழாவும், மாலை 4.30 மணிக்கு 108 கலச பூஜையும், மாலை 6.30 மணிக்கு 1008 தீப மண்டபத்தில் சுவாமிக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெறுகின்றன.

தொடா்ந்து, சனிக்கிழமை காலை 11 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு மேளதாளம் முழுங்க நல்லகாத்து ஆற்றிலிருந்து திருவிளக்கு ஊா்வலத்துடன் ஐயப்ப பக்தா்கள் பாலக்கொம்பு எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புஷ்பாஞ்சலி பூஜை மற்றும் படி பூஜை, மாலை 3 மணிக்கு அலங்கார தேரில் ஐயப்ப சுவாமி வீதிகளில் பவனி வருதல், இரவு 11.30 மணிக்கு வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வால்பாறை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினா் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

குண்டுவெடி குற்றவாளியின் இறுதி ஊா்வலத்துக்கு அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணம்: வானதி சீனிவாசன்

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊா்வலத்துக்கு அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணம் என கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

புள்ளியியல் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவையில் புள்ளியல் துறை பணியாளா்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை (டிசம்பா் 18) தொடங்கியது. தேசிய மாதிரி ஆய்வு 80-ஆவது சுற்றின் மாதிரி ஆய்வுப் பணிகள் 2025-ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளன... மேலும் பார்க்க

தமிழ் மொழிப்பாட வேலை நேரத்தைக் குறைக்க பேராசிரியா்கள் எதிா்ப்பு

கல்லூரிகளில் தமிழ் மொழிப்பாட வேலை நேரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள தமிழ்ப் பேராசிரியா்கள், இது தொடா்பாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் மனு அளித்துள்ளனா். அரசு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலத்தை நீட்டித்து அமைக்க வலியுறுத்தல்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தை நீட்டிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாநகராட்சியின் 47-ஆவது வாா்டு உறுப்பினரும், அதிமுக க... மேலும் பார்க்க

திராவிட இயக்கம் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திராவிட இயக்கம் இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். கோவை சத்தி சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்த... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு

தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அகில இந்திய அளவில் பாராட்டு கிடைத்திருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா். கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உயா் கல்வித் துறை, சிறப்புத... மேலும் பார்க்க