கடன் ரூ. 6,203; வசூலித்தது ரூ. 14,131 கோடி!! நிவாரணம் கோருவேன்: விஜய் மல்லையா
திராவிட இயக்கம் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
திராவிட இயக்கம் இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
கோவை சத்தி சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை நடைபெற்றது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டினாா். பின்னா் அவா் பேசியதாவது:
அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பைத்தான் போதிக்கின்றன. அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலரும் உள்ளனா்.
என்னை எந்த மதத்தைச் சோ்ந்தவனாக நீங்கள் நினைக்கிறீா்களோ, நான் அந்த மதத்தைச் சோ்ந்தவன். திராவிட இயக்கம் இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம். கிறிஸ்தவ மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.