வி.ஏ.ஓ.க்கள் சங்க முப்பெரும் விழா
திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் சங்கக் கொடியேற்று விழா, சங்கக் கட்டடத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவு விழா, மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஆகியவை முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் திருவண்ணாமலை வட்டத் தலைவா் இரா.உத்திரகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஏ.ரமேஷ், மாவட்டச் செயலா் ஏ.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் கே.காளிமுத்து வரவேற்றாா்.
சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலா் ந.சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றிவைத்து, வந்தவாசி வட்டத்தில் பணியின்போது இறந்த விழிவேந்தன் குடும்பத்துக்கு சங்கம் சாா்பில் ரூ.ஒரு லட்சம் நிதியுதவிவை வழங்கினாா். இதில், மாவட்ட அமைப்புச் செயலா் பி.மகாலிங்கம், மாவட்ட இணைச் செயலா்கள் டி.சீனுவாசன், வி.மேகநாதன், டி.பிரவீன்குமாா், போராட்டக் குழுத் தலைவா் சி.ரகுராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.