செய்திகள் :

விஜய் பிரசாரம்! நாகையில் மின்தடை!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்துப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

கடந்த திருச்சி கூட்டத்தில் தவெக தொண்டர்கள் விஜய்யை காண்பதற்காக உயரமான கட்டடங்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்களில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையை ஏற்று, விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விஜய் வருகை மற்றும் புறப்படும் போது அவரின் வாகனத்துக்கு பின்னால் தொண்டர்கள் வரக் கூடாது, உயரமான இடங்களிலும், அரசு, தனியார் கட்டடங்கள் மீதும் ஏறக் கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Vijay campaign: Power outage in Nagapattinam

இதையும் படிக்க : எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்... மேலும் பார்க்க

சென்னையில் போலி கால்சென்டர்கள்: 2 பெண்களை கைது செய்த புதுச்சேரி போலீஸ்!

சென்னை: போலியாக கால் சென்டர் நடத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பலரிடமிருந்து பணத்தை பெற்று சுமார் ரூ.2.5 கோடி அளவுக்கு மோசடி செய்த இரண்டு பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் க... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம்: சாலைவலம் வரும் முதல்வர் ஸ்டாலின்

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.ச... மேலும் பார்க்க

எதையும் செய்யறிவிடம் கேட்கலாம் என மெத்தனமாக இருக்கக் கூடாது: மு.க. ஸ்டாலின்

சென்னை: எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர் காரணம் என சொல்வதுத... மேலும் பார்க்க

திருச்சி - நாகைக்கு சாலை வழியே செல்லும் விஜய்!

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், சாலை வழியாக நாகப்பட்டினத்துக்கு காரில் புறப்பட்டார்.நாகப்பட்டினம் எல்லையில் விஜய்யை வரவேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்க... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையில், க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், சனிக்கிழமை காலை முதல் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் க்யூஆர் சேவை மூலம்... மேலும் பார்க்க