விஜய்யின் சாதனையை முறியடித்த அஜித்!
குட் பேட் அக்லி படத்தின் டீசர் பெரிய சாதனையைச் செய்திருக்கிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை இரவு வெளியானது.
இந்த டீசரில் அமர்களம், பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இதையும் படிக்க: ரசிகர்களுக்கு பாடகி ஸ்ரேயா கோஷால் வேண்டுகோள்!
டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 3.2 கோடி (32 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியதுடன் நடிகர் விஜய்யின் மாஸ்டர் (19.35 மில்லியன்), தனுஷின் கேப்டன் மில்லர் (17.46 மில்லியன்), விஜய்யின் சர்கார் (14.92 மில்லியன்), சூர்யாவின் கங்குவா (14.72) ஆகிய படங்களின் டீசர் சாதனையையும் அஜித் முறியடித்துள்ளார்.
மேலும், நடிகர் அஜித் நடித்த படங்களிலேயே இதுவே மிக விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி பெற்றுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.