பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச...
சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் 4-இல் திருவள்ளூா் மாவட்டத்தில்ஆய்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவை மற்றும் நிறைவேற்ற பணிகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு வரும் 4-ஆம் தேதி சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினா் வருகை தரவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், உறுதிமொழி அளித்தபடி நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-25 ஆண்டுக்கான 12 உறுப்பினா்கள் கொண்ட அரசு உறுதி மொழிக்குழுவின் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் மாா்ச் 4-ஆம் ஆய்வு செய்யவுள்ளனா்.
இதில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அன்றைய நாளில் பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.