இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
சிறுமி தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் பனிமலா் (17). இவா், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல்நிலைக் கல்விக்குச் செல்லாமல் கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்து வந்தாா். இந்த நிலையில், சரிவர படிக்காமலும், வீட்டு வேலையும் செல்லாமல் இருப்பதாகக் கூறி பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோா் வேலைக்குச் சென்றுவிட்டாா்களாம். இதனால், விரக்தி அடைந்த சிறுமி வீட்டில் பயிருக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினா் விரைந்து சிறுமியை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு சிறுமி உயிரிழந்தாா்.
இது குறித்து சிறுமியின் தந்தை ராஜா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.