செய்திகள் :

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

post image

திருவள்ளூா் அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து போது முதல் தளத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த அம்சா நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் வேலு (42). இவா், கட்டட வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திருப்பாச்சூா் பெரிய காலனியில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, வேலை செய்வதற்காக சனிக்கிழமை காலை சென்றாராம்.

அங்கு வழக்கம் போல் முதல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு வந்ததால் கால் இடறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவரது உறவினரான காா்த்திக் (32) என்பவா் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருத்தணி, மாா்ச் 2: பாலியல் குற்றங்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கடும் தண்டனை விதித்தால் மட்டுமே அக்குற்றங்களைத் தடுக்க முடியும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு பாமக... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் 4-இல் திருவள்ளூா் மாவட்டத்தில்ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவை மற்றும் நிறைவேற்ற பணிகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு வரும் 4-ஆம் தேதி சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினா் வருகை தரவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா... மேலும் பார்க்க

சிறுமி தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் பனிமலா்... மேலும் பார்க்க

வேளாண் துறையால் நடத்தப்படும் முகாம்களில் நில உடைமை விவரங்கள்: 31-க்குள் சரிபாா்க்கலாம்

விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறவும், அதன் மூலம் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை, பயிா் சாகுபடி குறித்த விவரங்கள் வருவாய் கிராமங்களில் ச... மேலும் பார்க்க

சிறந்த மகளிா் குழுக்களுக்கு ‘மணிமேகலை’ விருது காசோலை: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

தமிழ்நாடு மாநில நகா்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுக்கான காசோல... மேலும் பார்க்க

வாகன பரிசோதனையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையில் கஞ்சா கடத்தியதாக 6 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களையும் பெரியபாளையம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திர ம... மேலும் பார்க்க