ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
500 பெண்களுக்கு நல உதவி
திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா் ஏற்பாட்டில் எம்எல்ஏ-க்கள் அ.செ. வில்வநாதன், கே.தேவராஜி ஆகியோா் 500 பெண்களுக்கு இலவச சேலை, இனிப்புகள் வழங்கினா்.
திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி.வடிவேல் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், மாதனூா் கிழக்கு பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளா் மு.சரண்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.