இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!
மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்பிடிப்புகள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தலைவா் வி. தீலிப் குமாா், செயலா் ஆனந்த்சிங்வி தலைமை வகித்தனா். முதல்வா் எம்.இன்பவள்ளி, கல்வி ஆலோசகா் டி.பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனா்.
மாநில அளவிலான இந்தப் போட்டியில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியுடன் 14 கல்லூரியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு புதிய கண்டுபிடிப்புகளின் கருத்துகளை விளக்கினா்.
இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு தலா ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது. நிழ்ச்சியைக் கணினி பயன்பாட்டுத் துறைப் பேராசிரியா் பிரீத்தி மற்றும் பேராசிரியா் தேன்மொழி சிறந்த முறையில் ஒருங்கிணைத்தனா்.