Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
"விஜய்யை இப்படித்தான் சினிமாவுக்கு அறிமுக செய்ய விரும்பினேன். ஆனால்..." - எஸ்.ஏ.சந்திரசேகர்
அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சீமான், சினேகன், கரு.பழனியப்பன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசியிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், "தங்கர் பச்சன் பெரிய இயக்குநர். அவர் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தும்போது, அவரே இயக்கி படம் எடுக்கவில்லை. வேறொரு அறிமுக இயக்குநர் படத்தில், தன் மகனை நடிக்க வைத்திருகிறார்.
`விஜய் நடிக்க ஆசைப்பட்டபோது...’
என் மகன் விஜய் நடிக்க ஆசைப்பட்டபோது இதைத்தான் நான் செய்ய நினைத்தேன். நானே என் மகனை அறிமுகப்படுத்த நினைக்கவில்லை. அப்போது பல படங்களை இயக்கி பரபரப்பாக இருந்தேன். அதனால் விஜய்யை போட்டோக்களை எடுத்துக் கொண்டு பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களிடம் 'என் மகனை வைத்துப் படம் பண்ணுங்கள்' எனக் கேட்டேன். அது நடக்கவில்லை. ஆர்.பி.செளத்ரி சார்தான் 'நீயே பெரிய இயக்குநர், உன் மகனை வைத்து நீயே படம் எடு' என்றார். அதன்பிறகே நான் விஜய்யை வைத்து படம் எடுத்து, அவரை அறிமுகப்படுத்தினேன்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்
இப்போதெல்லாம் படம் வெற்றிபெற என்னவேண்டுமானலும் செய்கிறார்கள். வெற்றியைத் தாண்டி நல்ல கதையை படமாக்கி, அதை வெற்றி பெற வைக்க வேண்டும். ஒவ்வொரு இயக்குநருக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும். பார்வையாளர்கள் நல்ல திரைப்படங்களை கொண்டாடி வரவேற்க வேண்டும். நல்ல படங்கள், சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs