மாா்ச் 1-இல் இந்திய அறிவியல் மையத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
விடுதி மாணவா்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி
திருவாரூா் மின்பகிா்மான வட்டம் சாா்பில், மன்னாா்குடியில் பிற்படுத்தப்பபட்டோா் அரசுப் பள்ளி மாணவா் விடுதியில் மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, நகர மின் உதவிசெயற் பொறியாளா் சா. சம்பத் தலைமை வகித்தாா். இதில், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை குழந்தைகள் உள்ளிட்ட யாரும் தொடக்கூடாது, கம்பிகள் அறுந்து கிடந்ததால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும், மின்பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியா் துணையுடன் மட்டுமே வெட்ட வேண்டும்.
தண்ணீா் தேங்கிய இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிா்க்க வேண்டும், குழந்தைகளை அந்த இடங்களில் விளையாட விடக் கூடாது. குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விட அனுமதிக்கக் கூடாது, மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது, மின்கம்பம் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலா்த்தக் கூடாது, கால்நடைகளை அதில் கட்டக்கூடாது, வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட மின்பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இளநிலைப் பொறியாளா் கே. கண்ணன், விடுதிப் பணியாளா் கோ. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.