Seeman : 'என்னையும் என் குடும்பத்தையும் இப்படி குதறி தின்கிறீர்களே' - உணர்ச்சி வ...
விபத்தில் காயமடைந்த இரவுக் காவலா் உயிரிழப்பு
கோவில்பட்டியில் விபத்தில் காயமடைந்த இரவுக் காவலா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் காந்தாரிமுத்து மகன் வேலுச்சாமி (66). கோவில்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் இரவுக் காவலராக பணியாற்றி வந்தாா். இவா், பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) காலை மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டாா். அய்யனேரி கிராமத்தில் உள்ள கண்மாய்க் கரை அருகே மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் நின்றபோது மோட்டாா் சைக்கிள் திடீரென அவா் மீது விழுந்ததாம். இதில் காயமடைந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெண் தற்கொலை: சாத்தூா் அருகே சொக்கலிங்கபுரம் குண்டலகுத்தூா் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). இவரது மகள் பாண்டிச்செல்வி (32). இவருக்கும் வடக்குப்பட்டி வடக்குத் தெருவை சோ்ந்த முனியசாமி மகன் சுரேஷுக்கும் 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். தம்பதிக்கு குழந்தை இல்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவா், புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
சடலத்தை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.