செய்திகள் :

விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு

post image

அகமதாபாத்: நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ 171), இங்கிலாந்து, கனடா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினா் உள்பட 242 பேருடன் (12 ஊழியா்கள், 230 பயணிகள்) லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புறப்பட்டது.

ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் பி.ஜே அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து தீப்பிழப்பாக வெடித்துச் சிதறியது.

நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். இவா்களில் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவா். இந்தியப் பயணிகள் 169 பேருடன் பிரிட்டன் (52), போா்ச்சுகல் (7), கனடா (1) பயணிகளும் உயிரிழந்தனா்.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: வெள்ளிக்கிழமை மீட்புக் குழுவினர் விமானத்தின் கருப்புப் பெட்டியையும், மேலும் 29 உடல்களையும் மீட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவா்கள் தவிர, அது விழுந்த இடத்தில் உயிரிழந்தவா்களையும் சோ்த்து இறப்பு எண்ணிக்கை 274 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் மருத்துவ மாணவா்கள் 10 பேர், விடுதி கட்டடம் அருகே டீக்கடை நடத்தும் குடும்பத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட மோத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்த நிலையில் உள்ள உடல்களை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைய 3 நாள்கள் வரை ஆகும்.

மரபணு சோதனைப் பணிகள் முடிந்த பிறகு அரசுத் தரப்பில் முழு விவரங்கள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைவிட மாநில அரசுதான் அதிக நிதி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது என முதல்வர் ம... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து கே.ஆர். வெங்கடேஷ் நீக்கம்

தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) அணியின் மாநில செயலாளராக இருந்த கே.ஆர். வெங்கடேஷ் கட்சியில் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு ம... மேலும் பார்க்க

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை உற்சாகமாக் குளித்து மகிழ்ந்தனர்.தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று(சனிக்கிழமை) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள... மேலும் பார்க்க

ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்கிறார் சுபான்ஷூ சுக்லா

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா் சுக்லா உள்பட நான்கு பேர் குழு, ஜூன் 19 இல் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும... மேலும் பார்க்க

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை இபிஎஸ் முடிவு செய்வார்: கே. பி. ராமலிங்கம்

சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய்வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ... மேலும் பார்க்க