ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்! மத்திய கிழக்கில் அதிகரிக்கும்...
டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது.
இதையும் படிக்க: கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம், 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
டெம்பா என்றால் என்ன அர்த்தம்?
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது பெயரிலுள்ள டெம்பா என்ற சொல்லுக்கு முன்பு கூறிய விளக்கம் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
பவுமாவின் பாட்டி அவருக்கு டெம்பா எனப் பெயரிட்டதாக டெம்பா பவுமா முன்பு கூறியிருக்கிறார்.டெம்பா என்ற சொல்லின் அர்த்தம் நம்பிக்கை எனவும் டெம்பா பவுமா தெரிவித்திருக்கிறார். தங்களது சமூகத்தின் நம்பிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பவுமாவிற்கு அவரது பாட்டி டெம்பா என பெயரிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்து டெம்பா என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்றாற்போல் அணிக்கு நம்பிக்கையளித்துள்ளார் கேப்டன் டெம்பா பவுமா.
இதையும் படிக்க: முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!
21-ஆம் நூற்றாண்டில் தென்னப்பிரிக்க அணிக்காக முதல் ஐசிசி கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையும் டெம்பா பவுமாவையேச் சேரும்.