வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!
மிராய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்தி கட்டனேனி இயக்கத்தில் நடிகர்கள் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மிராய். பெரிய பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கல்கி திரைப்படம்போல் அதிக விஎஃப்எக்ஸ் கலந்த கதையாக உருவான இது வருகிற செப். 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஆக்சன் காட்சிகளுடன் கூடிய விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!