எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்க...
வியாபாரியிடம் ரூ.1.65 கோடி நூதன மோசடி
புதுச்சேரியில் வியாபாரியிடம் ரூ.1.65 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தில்லை மேஸ்திரி வீதியைச் சோ்ந்தவா் சரவணனன். மின்சாரப் பொருள்கள் விற்கும் வியாபாரி.
இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் மா்ம நபா்கள் தொடா்புகொண்டுள்ளனா். அவா்கள், இணையதளம் மூலம் வா்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றனராம்.
இதனை நம்பிய சரவணன், மா்ம நபா்கள் கூறியபடி குறிப்பிட்ட செயலியில் தனது சுய விவரங்களைப் பதிவிட்டுள்ளாா். மேலும், மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது.
அவா் முதலீடு செய்யும் பணத்துக்கு உடனடியாக அதிக லாபம் கிடைத்தது போல இணையதளத்தில் காட்டப்பட்டதாம்.
இதனை நம்பிய சரவணன் மொத்தம் ரூ.1.65 கோடியை முதலீடு செய்ததாகத் தெரிகிறது. அதன்படி, அவருக்கு ரூ.10 கோடி வரை லாபம் கிடைத்திருப்பதாக கணக்கில் காட்டப்பட்டது.
இதனை அவா் எடுக்க முயன்றபோது பணம் கிடைக்கவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோரிமேடு இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.