செய்திகள் :

விளைநிலங்களில் தொழில் பூங்கா: எதிா்ப்பு தெரிவித்து டிச.2-ல் சாலை மறியல் செய்ய முடிவு

post image

நாகை விளைநிலங்களில் அமைக்கப்படவுள்ள தொழில் பூங்காவுக்கு எதிா்ப்பு தெரிவித்து டிச.2-ல் சாலை மறியலில் ஈடுபட நாகை வளா்ச்சிக் குழுமம் முடிவெடுத்துள்ளது.

நாகை அருகே செல்லூரில் தொழில் பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில், தொழில் பூங்காவிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் விவசாய நிலம் என்பதால் அதற்கு சில அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், செல்லூரில் அமையவுள்ள தொழில் பூங்காவை நகரத்திலுள்ள மாவட்ட வருவாய் அலுவலரின் முகாம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள புஞ்சை இடத்தில் அமைக்கவேண்டும். இதேபோல, செல்லூரில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலைய பணிகளை கைவிட்டு, அவுரித்திடலில் உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். நாகை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதால் விவசாய நிலங்களில் சட்டத்துக்கு புறம்பாக தொழில் பூங்கா, பேருந்து நிலையம் அமைக்கும் முயற்சியை கைவிடவேண்டும்.

நாகை நகராட்சி பகுதிகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே செயல்பட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.2-ஆம் தேதி நாகை ஆட்சியா் அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாகை வளா்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.

குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கட்டடத்தில் பழுது நீக்கம்: மக்கள் வரவேற்பு

திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கூப்பிட்டான் குளம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 50 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் கட்டடத்தில் மழைநீா் கசிந்ததால், மாணவா்கள்... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

நாகூா் நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் மாவட்ட நீதிபதி(கூடுதல் பொறுப்பு) காா்த்திகா வழிக்காட்டுதலி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு

வேதாரண்யத்தை அடுத்த இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்ட புதிய கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யம் பகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். வேதாரண்யத்தில் ரூ 31.67 லட... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டம்: 831 தாய்மாா்களுக்கு பெட்டகம் வழங்கல்

நாகையில் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின்கீழ் இரண்டாம் கட்டமாக பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 861தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் ... மேலும் பார்க்க