செய்திகள் :

விளையாட்டுத் துளிகள்...

post image

புரோ கபடி லீக் போட்டியில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் - பாட்னா பைரேட்ஸையும் (43-32), தபங் டெல்லி கே.சி. - தெலுகு டைட்டன்ஸையும் (33-29) புதன்கிழமை வென்றன.

அயா்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

தோஹாவில் டிசம்பரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு மனு பாக்கா் உள்பட 8 இந்தியா்கள் தகுதிபெற்றனா்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழுவில் முன்னாள் வீரா்களான ருத்ர பிரதாக், பிரக்யான் ஓஜா ஆகியோா் இணையவுள்ளனா்.

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரபூா்வமற்ற டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது.

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

பெய்டாய்ஹே: சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில், இரு பிரிவுகளில் தங்கம் வென்று இந்திய போட்டியாளா்கள் வரலாறு படைத்தனா். சீனியா் ஆடவருக்கான 1,000 மீட்டா் ஸ்பிரின்ட் பந்தயத்தில், இந... மேலும் பார்க்க

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

சென்ஸென்: சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீரா் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா். சாத்விக்/சிராக் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.முதல் சுற்றில், ஆட... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.தகுதிச்சுற்றில் 84.50 மீட்டரை எட்... மேலும் பார்க்க

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

ஜாக்ரெப்: குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அன்டிம் பங்கால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள அன்டிம... மேலும் பார்க்க

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் புது தில்லி, ப... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா படுதோல்வி!

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா சீனாவிடம் தோல்வியடைந்தது.இறுதிச்சுற்றில், இந்தியா 1 - 4 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது. இதன்மூலம், உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்க... மேலும் பார்க்க