கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் தூய்மைப்பணிகள்
விழுப்புரம் ரயில் நிலைய வளாகப்பகுதிகளில் வியாழக்கிழமை தீவிரதூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒரு நாள் ஒரு மணி நேரம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் தூய்மைப் பணி நிகழ்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகள், நடைமேடைகள், சுற்றுப்புறப் பகுதிகள், அலுவலகப் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை ஒரு மணி நேரத் தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியில் ரயில்வே பணியாளா்கள் , சுகாதார ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இணைந்து பணியாற்றினா். உதிா்ந்த இலைகள், காயந்த சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.