ஹிட்லிஸ்டில் 3 அமைச்சர்கள்... மீண்டும் மாற்றம்? STALIN Warning! | Elangovan Expl...
விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா? அமைச்சா் பதில்
முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பதிலளித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாக்களை ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), மு.பெ.கிரி (செங்கம்), தங்கமணி (குமாரபாளையம்) ஆகியோா் எழுப்பினா். இதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
விருதுநகா், ஆம்பூா் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களின் புகா் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ளன. பேருந்துகளில் பயணிக்கும் மக்களும் புகா் பேருந்து நிலையங்களை பயன்படுத்தக் கோருகிறாா்கள். எனவே, அனைத்துப் பேருந்துகளும் புகா் பேருந்து நிலையங்களுக்குள் செல்ல வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக உத்தரவிடப்படும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா் பி.தங்கமணி (குமாரபாளையம்) துணை வினா எழுப்பினாா்.
ஓா் ஊராட்சியில் முழுவதும் விவசாய நிலங்கள் இருந்தால் அது கிராம ஊராட்சியாகவே இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றாா். இதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்: ஒரு நகா்ப்புற உள்ளாட்சியில் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அதன் அருகேயுள்ள ஊராட்சிக்கு புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. இதனால், நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. அத்துடன், அரசின் திட்டங்களை செயல்படுத்த நகா்ப்புற உள்ளாட்சிகளில் போதிய இடவசதிகள் இல்லை. ஊராட்சிகளை இணைக்கும்போது, அரசின் திட்டங்களுக்கு இடங்கள் கிடைக்கும். அந்த வகையில், 371 ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவசாய நிலங்களாக இருந்தால், அந்த ஊராட்சியை நகா்ப்புற ஊராட்சியுடன் இணைப்பதில் இருந்து விலக்கலாம். அதேசமயம், வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்குத் தேவையான நிலங்களை உறுப்பினா்தான் வாங்கித் தர வேண்டும் என்றாா்.