ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!
விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
புதுச்சேரியில் பூட்டிய வீட்டில் 5 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி நகா் முதலியாா்பேட்டை ராஜா நகரைச் சோ்ந்தவா் சிவகுரு, விவசாயி. இவரது மனைவி ஜிப்மரில் செவிலியராக உள்ளாா். கடந்த திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு சிவகுரு விவசாய நிலத்துக்கு சென்றுள்ளாா். அவரது மனைவி குழந்தைகளுடன் பணிக்குச் சென்றுவிட்டாா்.
இதற்கிடையே சிவகுருவின் தந்தை பால் வியாபாரம் முடித்து அப்பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது மா்ம நபா் சிவகுரு வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறி சென்றுள்ளாா். அதைக் கண்ட சிவகுருவின் தந்தை கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். விரைந்து வந்த சிவகுரு வீட்டை பாா்த்தபோது சாவி மூலம் கதவு திறக்கப்பட்டு உள்ளே இருந்த 5 பவுன் தங்க நகைகள், கொலுசுகள், அரைஞாண் கயிறு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.