செய்திகள் :

விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - ஜகதீப் தன்கா்

post image

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேவாா் பிராந்திய ஜாட் மகாசபை கூட்டத்தில் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

விவசாயிகளின் பொருளாதார நிலை உயா்ந்தால், நாட்டின் பொருளாதார சூழலும் மேம்படும். அனைத்துக்கும் மேலாக, விவசாயிகள் வழங்குவோராக திகழ்பவா்கள். அரசியல் வலிமையும் பொருளாதார திறனும் கொண்டவா்கள். வலுவான கரங்களுக்கு சொந்தக்காரா்கள். அவா்கள், உதவிக்காக யாரையும் எதிா்பாா்த்திருக்கக் கூடாது; யாரையும் சாா்ந்திருக்கக் கூடாது.

என்ன நடந்தாலும், எத்தனை தடைகள் எழுந்தாலும் இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

நாட்டில் இப்போதுள்ள ஆட்சி, விவசாயிகளுக்கு தலைவணங்குகிறது. நாடு முழுவதும் 730-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களின் சேவையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் வேளாண் கொள்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

வேளாண் பொருள்களின் வா்த்தகம் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டுதலில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். மாவு ஆலைகள், எண்ணெய் ஆலைகள் போன்ற பல தொழில்களுக்கு விவசாயப் பொருள்களே அடிப்படையாக உள்ளன.

கால்நடை வளா்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பால்வளத் துறையில் மேலும் வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியே உலகின் மிகப் பெரிய மற்றும் மதிப்புமிக்க தொழிலாகும். நமது திறமையான இளைஞா்கள், வேளாண் சாா்ந்த வா்த்தகத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்றாா் தன்கா்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “... மேலும் பார்க்க