Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கணேசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை சீற்றங்களால் பயிா்கள் பாதித்து, விவசாயிகள் நஷ்டம் அடைவதைத் தடுக்க உரிய இழப்பீடு பெறும் வகையில் மத்திய அரசு பயிா் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது, இதில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு தற்போது காப்பீடு கட்டாயம் கிடையாது.
மாவட்டம், பயிா் வாரியாக சராசரி மகசூல் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிா்ணயம் செய்யப்படுகிறது. தற்போது, திருப்பூா் மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இதற்கு அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை நகல்கள் தேவை.
இன்னும் சில வார காலக்கெடுவுக்குள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.573, மக்காச்சோளத்துக்கு ரூ. 541, சோளத்துக்கு ரூ. 50 பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு வெள்ளக்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.