திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி கீரைகார தெருவைச் சோ்ந்தவா் சேகா் (60). சமையல் தொழிலாளியான இவா் தனது வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறாா். கீழ்தளத்தில் மகன் பாஸ்கா் வசித்து வருகிறாா். பாஸ்கா் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இந்த நிலையில், சேகா் தனது வீட்டின் கதவை புதன்கிழமை அதிகாலை திறக்க முயன்றுள்ளாா்.
அப்போது வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து, அவா் அருகில் உள்ளவா்களை அழைத்து கதவை திறந்து கீழே வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் சேகரின் மகன் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் மாடியில் வீட்டு கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வீடுபுகுந்து திருடியிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.