இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!
வீரர்களை பத்திரமாக அழைத்துவர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
சென்னை: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை அடுத்து, வீரர்களை விமானத்தில் அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள், கங்கா-காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்த போதிலும் ஏ.சி. முன்பதிவு பெட்டியை வடமாநில கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்ததால் கூட்ட நெரிசலில் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை திரும்ப முடியாமல் தவித்த தமிழக வீரர்கள் சென்னை திரும்ப உதவுமாறு 6 வீரர்கள் உள்பட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர்.
கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!
இதனைத் தொடர்ந்து வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வரவுள்ளனர்.
தமிழக அரசுக்கு நன்றி
வாரணாசியில் ரயிலில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.