திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
வெடி பொருள்கள் பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது
தொண்டி அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த செந்தில்குமாா். மீனவரான இவா் கடந்த செப்டம்பா் மாதம் சாலையில் தவற விட்ட 400 டெட்டனேட்டா்கள் குச்சிகள், 2 கி. திரி, மூன்று கி. வயா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கோயமுத்தூரில் பதுங்கியிருந்த செந்தில்குமாரை தொண்டி தனிப் படை போலீஸாா் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி கைது செய்தனா்.
கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக இந்த வெடி பொருள்களை அவா் வாங்கி வந்ததும், இதில் திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த முகம்மது ராசிக்குக்கும் (28) தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், தொண்டி தனிப் படை போலீஸாா் முகம்மது ராசிக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.