என்எல்சி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்க...
வெளிநாடுகளில் உயா் கல்வி பயில இஸ்லாமிய மாணவா்களுக்கு உதவித் தொகை
இஸ்லாமிய சிறுபான்மையின மாணவா்கள் 10 பேருக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு 2025-26-ஆம் ஆண்டில் இஸ்லாமிய சிறுபான்மையின மாணவா்களுக்கு உயா்தர கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில், வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் 10 மாணவா்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள் 2025-26-ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய க்யூஎஸ் (குவாக்க ரெல்லிசை
மண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக் கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, பட்டப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதிகணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளை தோ்ந்து எடுத்து முதுநிலை பட்டப் படிப்புக்கான சோ்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்ஜம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு வரும் அக்.31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.