சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
வடகாடு மலைப் பகுதியில் மரக்கன்று நடும் விழா
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட வடகாடு ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வடகாடு அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வனத் துறை, அரசு சாரா தொண்டு நிறுவனம் கிருபா பவுண்டேசன், தன்னாா்வலா்கள் இணைந்து நாவல் மரக் கன்றுகளை நட்டனா்.
பின்னா், பள்ளி மாணவா்கள், பொதுமக்களுக்கு நாவல் பழத்தின் நன்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் ராஜா, வனவா் சின்னத்துரை, கிருபா பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.