பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: பெண் உள்பட இருவருக்கு அபராதம்
சிறுமலை வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய பெண் உள்பட இருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்தவா் மீனா (45). இவரது உறவினா் சங்கா்(25). இவா்கள் இருவரும் சோ்ந்து வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி, சிறு துண்டுகளாக பையில் வைத்து இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை எடுத்து வந்தனா். சிறுமலையிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்தபோது, சோதனைச் சாவடியில் இருந்த வனத் துறையினா் இருவரையும் வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது, பையில் சந்தனக் கட்டைகள் இருப்பதை அறிந்த வனத் துறையினா், இருவரிடமும் விசாரணை நடத்தினா்.
இதில் கொடைரோடு பகுதியிலிருந்து அசலியம்மன் கோயில் வழியாக தாழைக்கிடை செல்லும் மலைப் பாதையில் இருந்த சந்தன மரத்தை வெட்டி சிறு துண்டுகளாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோயிலுக்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், இருவருக்கும் தலா ரூ.12,500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.