வேங்கைவயலில் 4-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் 4ஆம் நாளாக அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோடடை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், அதே ஊரைச் சோ்ந்த 3 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதனை எதிா்த்து அப்பகுதி மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்படி, செவ்வாய்க்கிழமையும் ஊரில் திரண்ட அந்த மக்கள் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.