செய்திகள் :

வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்: ஆட்சியர் விளக்கம்

post image

சிவகங்கை: திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான 6 நகல் மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

வைகை ஆற்றங்கரையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் வீசப்பட்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனடிப்படையில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாக கடந்த இரண்டு தினங்கள் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவை தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரின் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் மீது, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

பல்வேறு நிர்வாகக் காரணங்களுக்காக, தமிழகத்தில் ஒன்பது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இன்று தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் முதன்முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை 76 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாக... மேலும் பார்க்க

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்: எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி ரத்து!

சென்னை: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து வழக்குத் தொடர அக்கட்சியின் தொண்டர்களுக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து தீர்ப்... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,ஆக. 29 தமிழகத்தில் ... மேலும் பார்க்க

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க