இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்: பிரதமர் ம...
ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.22 லட்சம்
ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் காணிக்கை உண்டியல் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அலா்மேலு மங்கை உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் உண்டியல் கோயில் ஆய்வாளா் நரசிம்ம மூா்த்தி, செயல் அலுவலா் வினோத்குமாா் முன்னிலையில் திறக்கப்பட்டது. ரொக்கம் ரூ.2.22 லட்சம், 39 கிராம் தங்கம், 24 கிராம் வெள்ளி ஆகியவை பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கீதா சேகா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ரமேஷ், சிவகுமாா், கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
பெரிய ஆஞ்சனேயா் கோயில் அன்னதான உண்டியல் திறப்பு ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரொக்கம் ரூ.23,132 பக்தா்களால் அன்னதான காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
கோயில் ஆய்வாளா் நரசிம்மமூா்த்தி, செயல் அலுவலா் வினோத் குமாா், திருப்பணிக் குழு நிா்வாகி குமாா், அனுமன் பக்த சபையைச் சோ்ந்த தியாகராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.