Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று போக்குவரத்து மாற்றம்
பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை (மாா்ச் 29) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவையொட்டி, மதுரையிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் கிருஷ்ணன்கோவிலிலிருந்து நான்கு வழிச் சாலையில் சிவகாசி சாலை வந்து ரயில் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையத்துக்குச் செல்ல வேண்டும்.
ராஜபாளையத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கு, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெரு, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரைக்குச் செல்ல வேண்டும். சிவகாசி செல்லும் பேருந்துகள் வழக்கம்போல செல்லலாம். நேதாஜி சாலை இருவழிப் பாதையாக செயல்படும். பெரிய மாரியம்மன் கோயில் பகுதி, சின்னக் கடைவீதி, நேதாஜி சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. தேவாலயம் சந்திப்பு முதல் ராமகிருஷ்ணாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம், காா், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என்றாா் அவா்.