டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: 7 நாள்கள் அரசு துக்கம் அனுசரிப்பு!
ஹரியாணாவில் நிலநடுக்கம்!
ஹரியாணா மாநிலத்தின் சோனிபத் மாவட்டத்தில் இன்று காலை 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இன்று காலை 09.42 மணியளவில் ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: +8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை
இந்நிலையில், நேற்று (டிச.25) இதே சோனிபத் மாவட்டத்தில் 5 கி.மீ ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கடந்த திங்களன்று (டிச.23) இந்திய மாநிலமான குஜராத்தின் கச்சு மாவட்டத்தில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.